/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போலீசார் டார்ச்சர் செய்வதாக எஸ்.பி.,யிடம் பெண் புகார் போலீசார் டார்ச்சர் செய்வதாக எஸ்.பி.,யிடம் பெண் புகார்
போலீசார் டார்ச்சர் செய்வதாக எஸ்.பி.,யிடம் பெண் புகார்
போலீசார் டார்ச்சர் செய்வதாக எஸ்.பி.,யிடம் பெண் புகார்
போலீசார் டார்ச்சர் செய்வதாக எஸ்.பி.,யிடம் பெண் புகார்
ADDED : ஜூலை 18, 2024 04:59 AM
கடலுார், : கள்ளச்சாராம் விற்பனை செய்கிறாயா என, போலீசார் தினமும் வீட்டிற்கு வந்து டார்ச்சர் கொடுப்பதாக, எஸ்.பி.,யிடம் பெண் புகார் அளித்துள்ளார்.
கடலுார் பனங்காட்டு காலனியை சேர்ந்தவர் வனிதா, 50; நேற்று எஸ்.பி., ராஜாராமை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில், நான் கடந்த 2020க்கு முன்பு சாராயம் விற்று வந்த நிலையில், பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கடந்த 1.1.2020 முதல் சாராயம் விற்பதை நிறுத்திவிட்டேன். திருந்தி வாழும் பொருட்டு, அரசு திட்டத்தில் கலெக்டர் உத்தரவின் பேரில் மதுவிலக்கு பிரிவு தாசில்தார் மூலம் இரண்டு கறவை பசுமாடு வாங்கி, குடும்பத்தை காப்பாற்றி வருகிறேன். இந்நிலையில் போலீசார் தினமும் எங்கள் வீட்டிற்கு வந்து சாராயம் விற்கிறாயா என, விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்து வருகின்றனர்.
போலீசார் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து பல மரணத்திற்கு பின்னர், திருந்தி வாழ்பவர்களுக்கு நெருக்கடி கொடுத்து மன உளச்சலை ஏற்படுத்துகின்றனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளார்.