சிதம்பரம் பள்ளியில் 107ம் ஆண்டு விழா
சிதம்பரம் பள்ளியில் 107ம் ஆண்டு விழா
சிதம்பரம் பள்ளியில் 107ம் ஆண்டு விழா
ADDED : பிப் 11, 2024 03:12 AM

சிதம்பரம்: சிதம்பரம் மாலைகட்டிதெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 107ம் ஆண்டு விழா நடந்தது.
விழாவிற்கு குமராட்சி வட்டாரக்கல்வி அலுவலர்கள் நடராஜன் குமார் தலைமை தாங்கினார். பட்டாதாரி ஆசிரியை ஜெயந்தி வரவேற்றார். தலைமையாசிரியை (பொறுப்பு) அகிலா ஆண்டறிக்கை வாசித்தார் . வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன், ஆசிரியர் பயிற்றுநர்கள் பாஸ்கர், பூங்குழலி, திலகவதி சிறப்புரையாற்றினர். கவுன்சிலர் சுதா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் கலை நிகழ்சிகள் நடந்தது.
விழாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி மற்றும் மக்கள் மருந்தகம் சார்பில் பரிசு வழங்கப்பட்டது.
ஆசிரியை லதா நன்றி கூறினார்.