/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ போதை கும்பல் அட்டூழியம் எதிரொலி டாஸ்மாக் பார்களில் டி.எஸ்.பி., ஆய்வு விருதையில் 11 பேர் அதிரடி கைது போதை கும்பல் அட்டூழியம் எதிரொலி டாஸ்மாக் பார்களில் டி.எஸ்.பி., ஆய்வு விருதையில் 11 பேர் அதிரடி கைது
போதை கும்பல் அட்டூழியம் எதிரொலி டாஸ்மாக் பார்களில் டி.எஸ்.பி., ஆய்வு விருதையில் 11 பேர் அதிரடி கைது
போதை கும்பல் அட்டூழியம் எதிரொலி டாஸ்மாக் பார்களில் டி.எஸ்.பி., ஆய்வு விருதையில் 11 பேர் அதிரடி கைது
போதை கும்பல் அட்டூழியம் எதிரொலி டாஸ்மாக் பார்களில் டி.எஸ்.பி., ஆய்வு விருதையில் 11 பேர் அதிரடி கைது
ADDED : செப் 15, 2025 02:29 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் போதை கும்பல் அட்டூழியம் எதிரொலியாக, டாஸ்மாக் பார்களில் டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தி 11 பேரை கைது செய்தனர்.
விருத்தாசலம், பழமலைநாதர் நகரை சேர்ந்தவர் கார்த்திக், 45; இவரை, அதே பகுதியை சேர்ந்த ரவுடிகள் கந்தவேலு, சிவா (எ) விக்னேஷ், பாலாஜி ஆகியோர் கடந்த 9ம் தேதி பயங்கர ஆயுதங்களால் தாக்கி, ரீல்ஸ் பதிவேற்றம் செய்தனர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இருவர் சேர்ந்து, மற்றொரு நண்பரை பீர் பாட்டில் குத்திய சம்பவம் அரங்கேறியது. விருத்தாசலத்தில் இரவு நேரத்தில் மதுபோதையால் நடந்த அசம்பாவிதம் காரணமாக பொது மக்கள், வியாபாரிகள் அச்சமடைந்தனர்.
இதை தவிர்க்கும் வகையில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மாலை, விருத்தாசலம் பஸ் ஸ்டாண்ட் உட்பட 11 இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகளுடன் உள்ள பார்களில் திடீர் சோதனை நடத்தினர்.
அதில், உரிமம் பெற்ற பார் உரிமையாளர்களிடம், அனுமதித்த நேரத்தை காட்டிலும் கூடுதல் நேரம் கடையை திறந்திருக்க கூடாது. கள்ளச்சந்தையில் மதுபானம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.
பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பாரில் கள்ளச்சந்தையில் மதுவிற்ற ஊழியர்கள் சுதாகர், 39; சம்பத்குமார், 42; தனசேகர், 41; வீரப்பன், 55; சிவக்குமார், 44; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், குப்பநத்தம் புறவழிச்சாலை டாஸ்மாக் கடை எதிரே பெட்டிக்கடையில் கப், தண்ணீர், சைடீஸ் விற்ற பாலமுருகன், 34; ரத்தீஷ்குமார், 36; பாஸ்கர், 35; செல்வமணி, 47; மற்றும் ரயில்வே ஜங்ஷன் முகப்பு டாஸ்மாக் கடை அருகே வேலாயுதம், 51; கார்த்திகேயன், 32; என 11 பேரை போலீசார் கைது செய்தனர்.
மது பாட்டில்கள், தண்ணீர் பாட்டில்கள், சைடீஸ் வகைகள் என 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.