/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சுவரில் பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயம் சுவரில் பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயம்
சுவரில் பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயம்
சுவரில் பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயம்
சுவரில் பஸ் மோதிய விபத்தில் 12 பேர் காயம்
ADDED : ஜூன் 11, 2025 07:13 AM
பண்ருட்டி; பண்ருட்டி அருகே கான்கிரீட் சுவற்றில் பஸ் மோதிய விபத்தில் 12 பயணிகள் காயமடைந்தனர்.
தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் அரசு விரைவு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். நள்ளிரவு 1:10 மணிக்கு கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த கண்டரக்கோட்டை தனியார் மகளிர் கல்லுாரி அருகில் வந்த போது, பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வலது 10 அடி உயர கான்கிரீட் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் டிரைவர், கண்டக்டர் உட்பட 12 பேர் லேசான காயத்துடன் தப்பினர். தகவலறிந்த பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.