/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ரேஷன் அரிசி கடத்தல் திட்டக்குடியில் 2 பேர் கைது ரேஷன் அரிசி கடத்தல் திட்டக்குடியில் 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தல் திட்டக்குடியில் 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தல் திட்டக்குடியில் 2 பேர் கைது
ரேஷன் அரிசி கடத்தல் திட்டக்குடியில் 2 பேர் கைது
ADDED : செப் 26, 2025 05:11 AM

திட்டக்குடி: திட்டக்குடி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 போலீசார் கைது செய்து, 2,800 கிலோ அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
திட்டக்குடி அடுத்த ஆவினங்குடி போலீசார் நேற்று காலை 11:30 மணிக்கு விருத்தாசலம் - திட்டக்குடி சாலையில் ஆவினங்குடி பஸ் நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த டி.என். 02 - பி.இசட். 1195 பதிவெண் கொண்ட பொலிரோ பிக்கப் வேனை நிறுத்தி சோதனை செய்ததில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிந்தது.
இதில் 70 கிலோ எடையிலான 40 மூட்டைகளில் 2,800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து டிரைவர் திட்டக்குடி அடுத்த செவ்வேரி கொடியரசன் மகன் ராகுல், 21; அரியலுார் மாவட்டம், குழுமூர் ரவி மகன் சங்கர், 28; ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசி கடத்தி வந்ததை ஒப்புக் கொண்டனர்.
உடன் போலீசார், 2 பேரையும் கைது செய்து ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வேனை பறிமுதல் செய்து, மாவட்ட குடிமை பொருள் தடுப்பு பிரிவின ரிடம் ஒப்படைத்தனர்.