/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முதல்வர் கோப்பை விளையாட்டு 2,671 பேருக்கு பதக்கம் வழங்கல் முதல்வர் கோப்பை விளையாட்டு 2,671 பேருக்கு பதக்கம் வழங்கல்
முதல்வர் கோப்பை விளையாட்டு 2,671 பேருக்கு பதக்கம் வழங்கல்
முதல்வர் கோப்பை விளையாட்டு 2,671 பேருக்கு பதக்கம் வழங்கல்
முதல்வர் கோப்பை விளையாட்டு 2,671 பேருக்கு பதக்கம் வழங்கல்
ADDED : செப் 25, 2025 03:34 AM

கடலுார் : கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.
தமிழக அரசு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை துாண்டும் வகையிலும், அவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் வகையிலும் முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் கடலுாரில் நடத்தப்பட்டது. பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்றுத்திறனாளிகள், அரசுப் பணியாளர்களுக்கும் மற்றும் பொதுப்பிரிவினருக்கும் பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் கடலுாரில் நடந்தது. இப்போட்டிகளில் பங்கேற்க அனைத்துப் பிரிவுகளிலும் 30,050 நபர்கள் பதிவு செய்திருந்தனர். போட்டிகளில் வென்ற பள்ளி மாணவ, மாணவிகள் 907 பேர், கல்லுாரி மாணவ, மாணவிகள் 894 பேர், மாற்றுத்திறனாளிகள் 210 பேர், அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள் 438 பேர், பொதுப் பிரிவில் 222 பேர் என, மொத்தம் 2,671 பேருக்கு கலெக்டர் பத்தகம் மற்றும் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் மற்றும் பயிற்றுநர்கள் உடனிருந்தனர்.