Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஒரே இடத்தில் 5 சொக்கப்பனைகள்

 ஒரே இடத்தில் 5 சொக்கப்பனைகள்

 ஒரே இடத்தில் 5 சொக்கப்பனைகள்

 ஒரே இடத்தில் 5 சொக்கப்பனைகள்

ADDED : டிச 05, 2025 05:16 AM


Google News
Latest Tamil News
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் பெரும்பாலான கோவில்களில் திருவண்ணாமலையில் தீபம் ஏற்றும் அன்று சொக்கப்பனை ஏற்றுவர். ஆனால் கீழ்பட்டாம்பாக்கம் மழுவேந்திய விநாயகர் கோவிலில் தீபதிருநாளின் மறுநாள் சொக்கப்பனை ஏற்றுவது வழக்கம்.

இக்கோவில் வளாகத்தில் விநாயகர், திரவுபதி அம்மன்,கெங்கையம்மன்,துர்க்கை அம்மன் மற்றும் வைத்தியநாதன் என 5 சுவாமிகளுக்கும் தனித்தனி சன்னதிகள் உள்ளன.

நேற்று மாலை சிறப்பு அபிஷேகம் முடிந்து சிறப்பு அலங்காரத்தில், இந்த சுவாமிகள் அருள் பாலித்தனர்.

இக்கோவிலில் நேற்று இரவு ஒரே சமயத்தில் 5 சொக்கப்பனைகள் ஏற்றப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us