ADDED : அக் 15, 2025 11:14 PM

சேத்தியாத்தோப்பு: சிதம்பரம் ஸ்ரீசரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் 94 வது பிறந்த நாள் விழா நடந்தது.
விழாவிற்கு, பள்ளி தாளாளர் சரவணன் தலைமை தாங்கி அப்துல்கலாம் படத்திற்கு மாலை அணிவித்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார்.பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி முதல்வர் மற்றும் சக ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


