/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தெரு விளக்குகள் பராமரிப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கைதெரு விளக்குகள் பராமரிப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கை
தெரு விளக்குகள் பராமரிப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கை
தெரு விளக்குகள் பராமரிப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கை
தெரு விளக்குகள் பராமரிப்பு தினமலர் செய்தியால் நடவடிக்கை
ADDED : பிப் 02, 2024 03:55 AM
புவனகிரி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், புவனகிரி பேரூராட்சி பகுதியில் பகலில் எரியும் தெரு விளக்குகள், கண்காணித்து ஒழுங்கு படுத்தப்பட்டது.
புவனகிரி பேரூராட்சி சாலை பகுதிகளில் தெரு விளக்குகள் இரவு, பகலாக எரிந்து வருவதால் மின்சாரம் விரயமாகி வருகிறது.
குறிப்பாக மேல் புவன கிரி மற்றும் கீரப்பாளையம் ஒன்றியத்தை சேர்ந்த கிராமங்களிலும், புவனகிரி பேரூராட்சி வார்டு பகுதிகளிலும் மின்விளக்குகள் எரிந்ததால் மக்கள் வரிப்பணம் விரயமாகியது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக நேற்று புவனகிரி பேரூராட்சி சேர்மன் கந்தன் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கண்காணித்து ஊழியர்கள் மூலம் பகலில் எரியும் விளக்குகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட செய்தனர்.


