/உள்ளூர் செய்திகள்/கடலூர்/குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
குறிஞ்சிப்பாடியில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 02, 2024 12:05 AM

வடலுார்: பட்டியலின மாணவியை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத, தி.மு.க., அரசை கண்டித்து குறிஞ்சிப்பாடியில், கடலுார் தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பஸ் நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர்ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.
ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தராஜ், வினோத், கமலக்கண்ணன், நகர செயலாளர்கள் வடலுார் பாபு, நெய்வேலி கோவிந்தராஜ், ஒன்றிய சேர்மன் கலையரசி கோவிந்தராஜ், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தனர்.
குறிஞ்சிப்பாடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாஷ்யம் வரவேற்றார். முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்பிரமணியன், தொழிற்சங்க பேரவை இணை செயலாளர் சூரியமூர்த்தி, மாவட்ட பேரவை செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். விழுப்புரம் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ராதாகிருஷ்ணன், அவைத் தலைவர் முத்துலிங்கம், மாவட்ட இணை செயலாளர் பிரேமா மோகன், துணைச் செயலாளர்கள் ஞானசெல்வி கல்யாணசுந்தரம், கோவிந்தராஜ், பொருளாளர் தேவநாதன், நெய்வேலி அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் வெற்றிவேல், தேவானந்தம், ஜோதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


