/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அரங்கநாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் அரங்கநாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
அரங்கநாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
அரங்கநாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
அரங்கநாத பெருமாள் கோவில் பிரம்மோற்சவம்
ADDED : ஜூன் 01, 2025 11:50 PM

திட்டக்குடி: வசிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
திட்டக்குடி அடுத்த வசிஷ்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவையொட்டி நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.
வரத சிங்காச்சாரியார், கோவில் பட்டாச்சாரியார் ராகவன் சிறப்பு பூஜைகள் செய்து கொடியேற்றப்பட்டு, விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். தினசரி காலையில் பல்லக்கில் வீதியுலாவும், இரவு சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் வீதியுலாவும் நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை திருத்தேரோட்டம் நடக்கிறது. 10ம் தேதி மதியம் துவாதச ஆராதனம், புஷ்பயாகம், பெரிய சாற்றுமுறை நடக்கிறது.