Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திறமையான மாணவர்களை உருவாக்குவதில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி முதன்மை

திறமையான மாணவர்களை உருவாக்குவதில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி முதன்மை

திறமையான மாணவர்களை உருவாக்குவதில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி முதன்மை

திறமையான மாணவர்களை உருவாக்குவதில் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி முதன்மை

ADDED : அக் 01, 2025 01:34 AM


Google News
Latest Tamil News
திறமையான மாணவர்களை உருவாக்கும் பள்ளியாக கடலுார் அரிஸ்டோ பப்ளிக் பள்ளி திகழ்கிறது என, தாளாளர் சிவக்குமார் கூறினார்.

இதுகுறித்து அவர், மேலும் கூறியதாவது:

கடலுாரில் முதன் முதலாக தேசிய கல்வி வாரியத்தின் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி, முன்னோடியாக திகழ்வது தான் இக்கல்வி நிறுவனம். வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் செல்லும் வழியிலுள்ள வண்டிப்பாளையம் சாலையில் 10 ஏக்கர் பரப்பளவில், விசாலமான வளாகத்துடன் இப்பள்ளி உள்ளது.

ஒழுக்கம், அறிவு, கலை, விளையாட்டு ஆகிய துறைகளில் குழந்தைகள் முழுமையாக வளர சிறந்த சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கத்துடன் கூடிய கற்றல் மற்றும் கற்பித்தல் முறையில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது.

பள்ளியில் சி.சி.டி.வி., கேமரா வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன அறிவியல் ஆய்வகம், வளமான நூலகம் போன்ற அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கடலூரின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் பாதுகாப்பாக சென்று வர வரவும் பஸ் வசதி உள்ளது.

பள்ளி வளாகத்தில் மாணவிகளுக்கென தனித்துவமான கல்வி கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பாதுகாப்பான சூழலில் தன்னம்பிக்கையுடன் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கல்வியுடன் மட்டுமல்லாது, விளையாட்டு, கலை, அறிவியல், தொழில்நுட்பம் போன்றவற்றில் மாணவர்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

ஹிந்தி, பிரெஞ்சு போன்ற மொழிப் பாடங்கள் திறமையான ஆசிரியர்களால் கற்பிக்கப்படுகின்றன. மேலும், பாடங்களில் பின் தங்கிய மாணவ, மாணவிகளுக்காக தனிப்பட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு, அவர்கள் முன்னேற்றம் அடைய சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

மாணவ, மாணவிகளுக்கு மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தின் படி, அனுபவமிக்க ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்படுகிறது. நீட், ஜே.இ.இ., போன்ற போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளி வளாகத்திலேயே நடத்தப்படுகின்றன.

தமிழக அளவில் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் முன்னோடியான பள்ளியாக திகழ வேண்டும் என்ற நோக்கத்தை முன்னெடுத்து, அதற்கேற்ற வகையில் மாணவர்களின் கனவுகளை நனவாக்குகிறோம்.

பள்ளியின் வளர்ச்சிக்கு பள்ளியின் நிறுவனர் சொக்கலிங்கம், கஸ்துாரி சொக்கலிங்கம், லட்சுமி சிவக்குமார், நிர்வாக அதிகாரி சிவராஜ், பள்ளி முதல்வர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us