தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கலைப்பொருட்கள் பராமரிப்பு பயிலரங்கம்

கலைப்பொருட்கள் பராமரிப்பு பயிலரங்கம்

கலைப்பொருட்கள் பராமரிப்பு பயிலரங்கம்


ADDED : ஜன 26, 2024 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2024 12:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார் : கடலுார் அரசு கலைக்கல்லுாரியில், வரலாற்றுத் துறை மற்றும் அரசு அருங்காட்சியகம் சார்பில், பழங்கால கலைப் பொருட்கள் பராமரிப்பு பயிலரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி துவக்கி வைத்தார். வரலாற்று துறைத்தலைவர் சிவகாமசுந்தரி வரவேற்றார்.

காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் உமாசங்கர், பழங்கால கலைப் பொருட்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

கடலுார் மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா, காஞ்சிபுரம் தொல்லியல் ஆர்வலர் செல்வராசு, செய்யாறு அண்ணா அரசு கலைக்கல்லுாரி வரலாற்றுத்துறை கவுரவ விரிவுரையாளர் மதுரைவீரன் செயல்முறை விளக்க பயிற்சி அளித்தனர். பயிற்சியில் கல்லுாரி வரலாற்றுத் துறையைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். கவுரவ விரிவுரையாளர் ஜபருன்னிஷா தொகுத்து வழங்கினார்.

விஜயலட்சுமி, சேதுராமன், காஞ்சனா தேவி, கவுரவ விரிவுரையாளர்கள் மோகன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். இணைப் பேராசிரியர் தெய்வாம்சம் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us