/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மஞ்சக்குப்பம் மைதானத்தில் குப்பைகளை கொளுத்தியதால் அவதிமஞ்சக்குப்பம் மைதானத்தில் குப்பைகளை கொளுத்தியதால் அவதி
மஞ்சக்குப்பம் மைதானத்தில் குப்பைகளை கொளுத்தியதால் அவதி
மஞ்சக்குப்பம் மைதானத்தில் குப்பைகளை கொளுத்தியதால் அவதி
மஞ்சக்குப்பம் மைதானத்தில் குப்பைகளை கொளுத்தியதால் அவதி
ADDED : பிப் 11, 2024 10:49 PM

கடலுார்: மஞ்சக்குப்பம் மைதானத்தில் குப்பைகளை கொளுத்தியதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
கடலூர் நகரின் மையப் பகுதியில் பல ஏக்கர் பரப்பளவில் மஞ்சக்குப்பம் நகர் மைதானம் அமைந்துள்ளது.
இந்த இடத்தில் அரசி யல் மதக்கூட்டங்கள், மாநாடுகள், பொருட்காட்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. மாலை நேரத்தில் வயதானவர்கள், அலுவலக ஊழியர்கள், இளைஞர்கள் என பலரும் இங்கு வந்து காற்று வாங்கிச்செல்வது வழக்கம்.
இந்நிலையில், தற்போது குப்பை கொட்டும் இடமாக இந்த மைதானம் மாறிவிட்டது. மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள், வாகனங்கள் மூலம் ஏற்றிவரப்பட்டு இங்கு கொட்டப்படுகின்றன. இதனால், மைதானம் தற்போது குப்பை மேடாக காட்சியளிக்கிறது. இந்த குப்பை மேடுகளை நேற்று மர்மநபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இதனால், கடும் புகைமூட்டம் ஏற்பட்டத்தில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கண் எரிச்சலுடன் சாலையை கடந்து சென்றனர்.