/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ பெண்ணாடத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு பெண்ணாடத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு
பெண்ணாடத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு
பெண்ணாடத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு
பெண்ணாடத்தில் வணிகர்களுக்கு விழிப்புணர்வு
ADDED : மார் 21, 2025 07:14 AM

பெண்ணாடம் : பெண்ணாடம் நகர வணிகர்களுக்கு குற்றச்செயல்களை தடுப்பது குறித்து விழப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சப் இன்ஸ்பெக்டர் பொட்டா தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் பங்கேற்று, பெண்ணாடம் நகரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் துணிக்கடை, நகை மற்றும் நகை அடகு கடைகள், ஹார்டுவேர் உட்பட அனைத்து கடைகளிலும் தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கடைகளுக்கு சந்தேக நபர்கள் யாரேனும் வந்தால் போலீஸ் நிலையத்திற்கு உடனே தகவல் தெரிவிப்பது. கடைகளுக்கு பொருள் வாங்க வருவோர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
அப்போது, நகர வர்த்தக சங்க தலைவர் ராம்மோகன், செயலாளர் சேட்டு முகமது, பொருளாளர் சேகர், இணை செயலாளர்கள் அருள், ரவி, துணை தலைவர்கள் தெய்வசிகாமணி, அலாவுதீன், அடகு கடை சங்க நிர்வாகிகள் சுரேஷ், மாமாங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.