ADDED : பிப் 02, 2024 12:02 AM

விருத்தாசலம்: சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் மற்றும் விருத்தாசலம் காவல்துறை சார்பில், விருத்தாசலத்தில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் அந்தோணிராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன் முன்னிலை வகித்தனர். ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் பேரணியை துவக்கி வைத்தார். அப்போது, பைக் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வலியுறுத்தி, வாகன ஓட்டிகள், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
பேரணியில் சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, விருத்தாசலம் முக்கிய வீதிகள் வழியாக பேரணி நடந்தது.


