ADDED : ஜன 18, 2024 04:44 AM

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பத்தில் பா.ஜ., சார்பில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது.
கடலுார் மாநகராட்சி 6வது வார்டில் நடந்த நிகழ்ச்சியில் பா.ஜ., மாநகர தலைவர் வேலு வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
கிழக்கு மாநகர பொதுச் செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். குழந்தைகளின் யோகா இசை நடன நிகழ்ச்சிகள் நடந்தது.
பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் வினோத் ராகவேந்திரன் பங்கேற்று, போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு மற்றும் பெண்களுக்கு சேலை வழங்கி பேசினார்.
முன்னாள் நகர தலைவர் தேவநாதன், பாஸ்கர், மாநகர பொது செயலாளர் முருகன், மாநகர துணைத் தலைவர் ஏழுமலை, மாவட்ட விளையாட்டு பிரிவு தலைவர் பிரவீன், செயலாளர் ஆடலரசன், ஓ.பி.சி., அணி முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


