ADDED : அக் 07, 2025 12:30 AM

புவனகிரி; தலைக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகம் வழங்கப்பட்டது.
காலாண்டு விடுமுறை முடிந்து கடலுார் மாவட்டத்தில் நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. இரண்டாம் பருவ பாட புத்தங்கள் அன்றைய தினமே மாணவ, மாணவியருக்கு வழங்க கல்வித்துறை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
அதன்படி, புவனகிரி ஒன்றியம், வடதலைக்குளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி காலாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட்டன.
இதனையொட்டி இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்களை தலைமை ஆசிரியர் துரை மணிராஜன், மாணவர்களுக்கு வழங்கினார். உதவி ஆசிரியை வசந்தா மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.


