/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாமாவிற்கு மிரட்டல் : மைத்துனர் மீது புகார் மாமாவிற்கு மிரட்டல் : மைத்துனர் மீது புகார்
மாமாவிற்கு மிரட்டல் : மைத்துனர் மீது புகார்
மாமாவிற்கு மிரட்டல் : மைத்துனர் மீது புகார்
மாமாவிற்கு மிரட்டல் : மைத்துனர் மீது புகார்
ADDED : அக் 23, 2025 12:53 AM
குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த கருமாச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் மகன் அருண்குமார், 25; இவருக்கு, 4 ஆண்டுகளுக்கு முன்பு அம்பலவாணன்பேட்டை பகுதியை சேர்ந்த ஸ்ரீராம் மகள் சுவாதி என்பவருடன் திருமணம் நடந்தது.
கடந்த, 5 மாதங்களுக்கு முன்பு தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சுவாதி தனது தந்தை வீட்டிற்கு சென்றுவிட்டார். தீபாவளியன்று அருண்குமார் மனைவி சுவாதியை அழைக்க சென்றபோது தகராறு ஏற்பட்டது. அதில் ஸ்ரீராம் மகன் சரண், மாமா அருண்குமாரை ஆபாசமாக திட்டி, தாக்கி, கத்தியால் தாக்கினார். இதில் காயமடைந்த அருண்குமார் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த சரண் மீது குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


