/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஒலிம்பிக் போட்டிக்கு கடலுார் மாணவர் தகுதி ஒலிம்பிக் போட்டிக்கு கடலுார் மாணவர் தகுதி
ஒலிம்பிக் போட்டிக்கு கடலுார் மாணவர் தகுதி
ஒலிம்பிக் போட்டிக்கு கடலுார் மாணவர் தகுதி
ஒலிம்பிக் போட்டிக்கு கடலுார் மாணவர் தகுதி
ADDED : அக் 23, 2025 01:03 AM

கடலுார்: கடலுாரைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர் கார்த்திக், 21; இவர் கடந்த ஆண்டு மலேசியாவில் நடந்த பத்தாவது ஆசிய பசிபிக் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுப்போட்டியில் 110 மீட் டர் தடை தாண்டும் போட்டியில் ப ங்கேற்று வெள்ளிப்பதக்கம் வென்றார்.
தற்போது இவர் ஜப்பானில் நடக்க உள்ள காது கேளாதோருக்கான ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார். சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்ற கார்த்திக்கை பயிற்சியாளர், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் பாராட்டினார். இதற்கான பயிற்சி முகாம் அக்.24 முதல் நவ.13ம் தேதி வரை டெல்லி ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடக்கிறது.


