Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ காலநிலை மாற்றத்தால் பிச்சாவரம் பாதிக்காமல் இருக்க ...நடவடிக்கை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் அமைக்க முடிவு

காலநிலை மாற்றத்தால் பிச்சாவரம் பாதிக்காமல் இருக்க ...நடவடிக்கை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் அமைக்க முடிவு

காலநிலை மாற்றத்தால் பிச்சாவரம் பாதிக்காமல் இருக்க ...நடவடிக்கை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் அமைக்க முடிவு

காலநிலை மாற்றத்தால் பிச்சாவரம் பாதிக்காமல் இருக்க ...நடவடிக்கை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்கள் அமைக்க முடிவு

ADDED : செப் 26, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
கடலுார்: பிச்சாவரம் பகுதியை காலநிலை மீள்திறன்மிகு கிராமங்களாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் பாதிப்பு ஏற்படும் இடங்களாக 11 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இதில், கிள்ளை பேரூராட்சி பிச்சாவரம் இடம் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீட்பதற்காக இப்பகுதியில் தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையின் மூலம் காலநிலை மீள்திறன்மிகு கிராமங்களாக மாற்ற பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி, பிச்சாவரம் பகு தியில் காலநிலை மீள்திறன் கிராம அலுவலகம் அமைப்பது. பக்கிங்காம் கால்வாய் துார்வாருதல். சோலார் மின் விளக்குகள் அமைப்பது. மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள். பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் கூடிய பசுமை பள்ளி வளாகம் அமைப்பது.

சதுப்புநில காடுகளை மேம்படுத்தும் விதமாக அலையாத்தி செடிகள் நடவு செய்வது. மக்களின் வாழ்வாதார நடவடிக்கையை மேம்படுத்தும் விதமாக சோலார் மீன் உலர்த்திகள் அமைப்பது. சதுப்பு நிலங்களை பாதுகாத்து மேம்படுத்தும் வகையில், வனத்துறை அலுவலர்களை உறுப்பினர் செயலராக கொண்ட கிராம சதுப்பு நில மேம்பாட்டு குழு அமைப்பது.

பிச்சாவரம் படகு இல்லத்தில் மின் படகுகள் மூலம் பசுமை சுற்றுலாவை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை ஏற்படுத்தப்பட உள்ளன.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ ஆய்வு செய்தார். தொடர்ந்து, கிராம பெண்களிடம் கலந்துரையாடினார்.

கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், முதன்மை தலைமை வன பாதுகாவலர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வன அலுவலர், தலைமை வனவிலங்கு காவலர் ரகேஷ்குமார் டோக்ரா, மாவட்ட வன அலுவலர் குருசாமி, காலநிலை மாற்றத்திற்கான ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் சவுமியா சாமிநாதன், ரமேஷ், ராமச்சந்திரன், எரிக் சோலஹிம், நிர்மலா ராஜா, சுந்தர்ராஜன், கலையரசன் உடனிருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us