Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நேரடி நெல் கொள்முதல் நிலையம்  திறப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையம்  திறப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையம்  திறப்பு

நேரடி நெல் கொள்முதல் நிலையம்  திறப்பு

ADDED : அக் 12, 2025 10:41 PM


Google News
கடலுார்; கடலுார் பெரிய கங்கணாங்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப் பட்டுள்ளது.

கடலுார் ஒன்றியம், பெரியகங்கணாங்குப்பம், சின்னகங்கணாங்குப்பம், நாணமேடு, உச்சிமேடு சுற்றுப்பகுதியில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் நெல் சாகுபடி செய்வது அதிகரித்து வருகிறது.

எனவே இப்பகுதிக்கென நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதைத்தொடர்ந்து நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் பெரிய கங்கணாங்குப்பத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் துவக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக நெல் கொள்முதல் செய்து வருவதால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு நிர்ணயித்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து பயனடைந்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us