கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு
கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு
கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு
ADDED : அக் 20, 2025 09:42 PM

கடலுார்: கடலுார் அம்மன் கோவில்களில் தீபாவளி நோன்பு சிறப்பு வழிபாடு நடந்தது.
தீபாவளி நோன்பு மூலமாக குடும்பம் வளம் பெறும் என்பது ஐதீகம். இதனால் பெரும்பாலான இந்துக்கள் தீபாவளி நோன்பு கடைபிடிப்பது வழக்கம். இந்தாண்டு தீபாவளியையொட்டி கடலுார் திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், மஞ்சக்குப்பம், செம்மண்டலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நோன்பு பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவில் கூடியதால் விற்பனை களை கட்டியது.
நேற்று நோன்பையொட்டி விரதம் மேற்கொண்ட பெண்கள் விறகு அடுப்பு, சட்டி, பானையில் அதிரசம் தயார் செய்து, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபாடு செய்தனர். பின்னர், வீட்டிற்கு வந்து சுவாமிக்கு படையலிட்டு விரதத்தை முடித்தனர். கைகளில் நோன்பு கயிறு கட்டிக் கொண்டனர்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் திரவுபதியம்மன் கோவில், புதுப்பாளையம் கிராம தேவதை மாரியம்மன் என பல்வேறு அம்மன் கோவில்களில் தீபாவளி நோன்பு வழிபாடு நடந்தது.


