தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
தி.மு.க., முகவர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : செப் 26, 2025 04:59 AM
வடலுார்: குறிஞ்சிப்பாடி சட்டசபை தொகுதி தி.மு.க., ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் மற்றும், தேர்தல் பணி ஒருங்கிணைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆலோசனை கூட்டம் வடலுாரில் நடந்தது.
மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தேர்தல் பணிகள் குறித்து ஆலாசனை வழங்கினார். ஒன்றிய செயலாளர் சிவக்குமார், தொகுதி மேற்பார்வையாளர்கள் அங்கையர்கண்ணி, சின்னமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், ஒன்றிய செயலாளர்கள் நாராயணசாமி, காசிராஜன், நகர தலைவர் சிவக்குமார், துணை தலைவர் சுப்பராயலு, நகர செயலாளர் தமிழ்செல்வன், ஜெய்சங்கர், துணை தலைவர் ராமர், துணை செயலாளர் விடுதலை சேகர், மாவட்ட பிரதிநிதி குமார், மாவட்ட அணி நிர்வாகிகள் தகவல் தொழில்நுட்ப அணி ஜாஃபர், பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.