/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்லுாரி மாணவர்களுக்கு தி.மு.க., இனிப்பு வழங்கல் கல்லுாரி மாணவர்களுக்கு தி.மு.க., இனிப்பு வழங்கல்
கல்லுாரி மாணவர்களுக்கு தி.மு.க., இனிப்பு வழங்கல்
கல்லுாரி மாணவர்களுக்கு தி.மு.க., இனிப்பு வழங்கல்
கல்லுாரி மாணவர்களுக்கு தி.மு.க., இனிப்பு வழங்கல்
ADDED : மார் 18, 2025 10:50 PM

விருத்தாசலம் : விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு, தி.மு.க., மாணவரணி சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது.
அரசு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு 20 லட்சம் லேப்டாப் வழங்கப்படும் என தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. அதனை வரவேற்று, தி.மு.க., மாணவரணி சார்பில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மாணவரணி துணை அமைப்பாளர் செல்வமணி தலைமை தாங்கினார். மாணவரணி பொறுப்பாளர்கள் கிருஷ்ணராஜ், பாலகுமார், பாலாஜி, தமிழ் மாணவர் மன்ற பொறுப்பாளர் கதிரவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.