/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வடலுாரில் தி.மு.க., செயற்குழு மாவட்ட செயலாளர் அழைப்பு வடலுாரில் தி.மு.க., செயற்குழு மாவட்ட செயலாளர் அழைப்பு
வடலுாரில் தி.மு.க., செயற்குழு மாவட்ட செயலாளர் அழைப்பு
வடலுாரில் தி.மு.க., செயற்குழு மாவட்ட செயலாளர் அழைப்பு
வடலுாரில் தி.மு.க., செயற்குழு மாவட்ட செயலாளர் அழைப்பு
ADDED : மே 24, 2025 11:51 PM
கடலுார்: கடலுார் கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை காலை வடலுாரில் நடக்கிறது.
இதுகுறித்து கிழக்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கை:
கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் நாளை 26ம் தேதி காலை 9:00 மணிக்கு வடலுார் மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடக்கிறது. தேர்தல் பணிக்குழு செயலாளர் புகழேந்தி தலைமை தாங்குகிறார்.
கூட்டத்தில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா, 2026 சட்டசபை தேர்தல் பணிகள் சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட உள்ளது. கூட்டத்தில் சட்டசபை தொகுதி பார்வையாளர்கள், கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.,க்கள் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.