/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா நாளை துவக்கம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா நாளை துவக்கம்
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா நாளை துவக்கம்
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா நாளை துவக்கம்
திரவுபதி அம்மன் கோவில் தீமிதி விழா நாளை துவக்கம்
ADDED : மே 26, 2025 04:36 AM
கடலுார் : பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பிரம்மோற்சவம் நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடலுார், பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி பிரம்மோற்ச விழா நாளை 27ம் தேதி இரவு 7:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து, தினசரி மாலை பாரதப் போர் கதா காலோட்சபம் நடக்கிறது.
வரும் 8ம் தேதி இரவு பக்காசூரனுக்கு சோறு போடுதல், 9ம் தேதி இரவு 7:00 மணிக்கு அர்ச்சுனர் வில் வளைத்தல், தொடர்ந்து அம்மன் திருக்கல்யாணம் நடக்கிறது. 10ம் தேதி திரவுபதி அம்மன், அர்ச்சுனர் பரிவேட்டை, 11ம் தேதி பூச்சொரிதல் உற்சவம், 12ம் தேதி கரக உற்சவம் நடக்கிறது.
முக்கிய விழாவாக வரும் 13ம் தேதி காலை மாடு விரட்டுதல், அரவாண் களப்பலி, பஞ்ச பாண்டவர்களை வீரமாகாளி உயிர்ப்பெழுதலை தொடர்ந்து, மாலை தீ மிதி உற்சவம் நடக்கிறது.
14ம் தேதி தர்மர் பட்டாபிேஷகம், 108 பால்குடம் ஊர்வலம் மற்றும் மஞ்சள் நீராட்டும், 20ம் தேதி போத்து ராஜா உற்சவமும் நடக்கிறது.
ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் பெருமாள், சந்திரசேகரன், கோவிந்தன், கந்தசாமி, சுந்தரேசன், விழாக்குழு தலைவர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி செய்து வருகின்றனர்.