ADDED : ஜூன் 25, 2025 08:14 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்த மூதாட்டியை போலீசார் கைது செய்தனர்.
கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று பாசிகுளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் மனைவி சின்னபிள்ளை, 62; என்பவர் கள்ளத்தனமாக அரசு டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து சின்னபிள்ளையை கைது செய்து, 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.