ADDED : செப் 26, 2025 05:11 AM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே மின்னல் தாக்கி மூதாட்டி இறந்தார்.
கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த. சிலம்பிமங்களத்தைச் சேர்ந்தவர் நாகமுத்து மனைவி நாகம்மாள், 73 ; இவர் நேற்று மாலை அதே பகுதியில் வீரன் கோவில் அருகே செல்வராஜ் என்பவரின் வயலில் வே லை செய்து விட்டு, வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மின்னல் தாக்கியதில் அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். அவருடன் நடந்து வந்த தனபால் மனைவி ராஜநாயகம், 65; என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டு, புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.