/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 26, 2025 05:04 AM

கடலுார: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பினர், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
மாநில துணைச் செயலாளர் வேலவன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார். சீதாராமன் வரவேற்றார். அரசு பணியாளர் சங்க மாநில பொருளாளர் ராமலிங்கம் பேசினார். நிர்வாகிகள் ரமேஷ், வேல்முருகன், அருள், ஜெய்சங்கர், ரமேஷ், குமரேசன், தேவநாதன், வேல்முருகன், வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் துாய்மைக்காவலர்களின் மாத ஊதியத்தை 10 ஆயிரமாக உயர்த்த வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 18 ஆண்டுகளாக பணிபுரியும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வெளியிட்ட அரசாணையை செயல்படுத்த வேண்டும் என்பது உட்பட 16 கோரிக்கைள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதே கோரிக்கைளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆர்ப்பாட்டம், நவ., 24ம் தேதி முதல் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.