/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மழையின் கருணையால் தீ விபத்து தவிர்ப்பு மழையின் கருணையால் தீ விபத்து தவிர்ப்பு
மழையின் கருணையால் தீ விபத்து தவிர்ப்பு
மழையின் கருணையால் தீ விபத்து தவிர்ப்பு
மழையின் கருணையால் தீ விபத்து தவிர்ப்பு
ADDED : அக் 20, 2025 09:44 PM
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் பகுதியில் மழையின் கருணையால் தீ விபத்து ஏற்படாததால் தீயணைப்ப வீரர்கள் நிம்மதியடைந்தனர்.
தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பதால் கூரை வீடுகளில் தீ விபத்து ஏற்படுவது வழக்கம்.
இதனால் தமிழகத்தில் தீபாவளிக்கு தீயணைப்பு வீரர்கள் யாருக்கும் விடுமுறை அளிப்பதில்லை. கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் கூரை வீடுகள் ஈரப்பதமாக உள்ளன. மழையின் கருணையால் நெல்லிக்குப்பம் பகுதியில் தீபாவளி பண்டிகையின் போது, தீ விபத்து தவிர்க்கப்பட்டதால் தீயணைப்பு வீரர்கள் நிம்மதியடைந்தனர்.
இதே போன்று, நெல்லிக்குப்பம் பகுதியில் குடிபிரியர்களால் தீபாவளியன்று ஏராளமான தகராறுகள் நடக்கும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக இன்ஸ்பெக்டர் வேலுமணி, சப் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டாதால் தகராறு நடப்பதும் தவிர்க்கப்பட்டது.


