/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் உணவு திருவிழா ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் உணவு திருவிழா
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் உணவு திருவிழா
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் உணவு திருவிழா
ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் உணவு திருவிழா
ADDED : அக் 16, 2025 11:41 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் டாக்டர் இ.கே.சுரேஷ் கல்வி குழுமம், ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளியில், உலக உணவு தினத்தை முன்னிட்டு, பாரம்பரிய உணவு திருவிழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு, கல்வி குழும தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் இந்துமதி சுரேஷ், பொருளாளர் அருண்குமார், டீன் கவிப்பாண்டியன், பெற்றோர் அசிரியர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் அருணாமேரி வரவேற்றார். இதில், கல்வி குழுமத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்த உணவு திருவிழாவில், சிறு தானியங்களாக கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, வரகு ,சோளம் உள்ளிட்ட பொருட்களினால் தயார் செய்யப்பட்ட உணவு பொருட்கள் காட்சிபடுத்தப்பட்டிருந்தன.
மேலும், பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, குதிரைவாளி, கருப்பு கவுனி உள்ளிட்ட அரிசிகளினால் தயார் செய்யப்பட்ட உணவு வகைகளும் காட்சி படுத்தப்பட்டிருந்தன.


