/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மரங்களை வெட்ட முயன்ற கும்பல்; கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு மரங்களை வெட்ட முயன்ற கும்பல்; கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு
மரங்களை வெட்ட முயன்ற கும்பல்; கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு
மரங்களை வெட்ட முயன்ற கும்பல்; கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு
மரங்களை வெட்ட முயன்ற கும்பல்; கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு
ADDED : செப் 10, 2025 08:51 AM

சிறுபாக்கம் ; சிறுபாக்கத்தில் அனுமதியின்றி 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்ட முயன்ற கும்பலை கிராம மக்கள் தடுத்ததால் பரபரப்பு நிலவியது.
சிறுபாக்கம் ஊராட்சிக்குட்பட்ட எஸ்.மேட்டூர் கிராமத்தில் பட்டி மாரியம்மன் கோவில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்த கருவேல மரங்கள் உள்ளன.
இதனை கோவில் புனரமைப்பு பணிக்கு பயன்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு எவ்வித அறிவிப்பின்றி ஒரு கும்பல் மரங்களை வெட்ட முயன்றது. இதனையறிந்து வந்த அப்பகுதி மக்கள் மரம் வெட்டும் பணியை தடுத்து நிறுத்தினர். பின், கோவிலின் முன் எவ்வித அறிவிப்பின்றி மரங்களை வெட்ட கூறிய மங்களூர் ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் யாரும் சமரச பேச்சு வார்த்தைக்கு வராததால், 8:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.