Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ அனைத்து ஊராட்சிகளிலும் 11ம் தேதி கிராம சபை கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 11ம் தேதி கிராம சபை கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 11ம் தேதி கிராம சபை கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் 11ம் தேதி கிராம சபை கூட்டம்

ADDED : அக் 08, 2025 12:34 AM


Google News
கடலுார்; கடலுார் மாவட்டத்தில் வரும் 11ம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில், வரும் 11ம் தேதி காலை 11:00 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது.

இக்கூட்டத்தை ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றியும், மதசார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்தாமல் பொதுவான இடங்களில் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில், கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சி பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி நடத்த வேண்டுமென, அனைத்து தனி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம சபை கூட்டத்தில் கிராம மக்களின் 3 அத்தியாவசிய தேவைகளை தேர்வு செய்தல், சாதிப் பெயர்களை கொண்ட குக்கிராமங்கள் மற்றும் தெருக்கள் பெயரை மாற்றுதல், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்துவது.

கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், துாய்மை பாரத இயக்க திட்டம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் ஆகியவை குறித்துவிவாதிக்கப்பட உள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us