ADDED : ஜூன் 02, 2025 11:46 PM
குறிஞ்சிப்பாடி: குருவப்பன்பேட்டை அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா நடந்தது
குறிஞ்சிப்பாடி அடுத்த குருவப்பன்பேட்டை அங்காளம்மன் கோவிலில் 20ம் ஆண்டு மயானக் கொள்ளை திருவிழா கடந்த மே 31ம் தேதி, காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அன்றிரவு அம்மன் வீதியுலா, நேற்று முன்தினம் குறத்தி வேடமிட்டு குறி உரைத்தல் ஆகியவை நடந்தன.
மூன்றாம் நாளான நேற்று காலை உச்சி கொப்பரை உடைத்தல், மாலை மயானக் கொள்ளை உற்சவம், இரவு பாவாடைராயன் கும்ப பூஜை, அம்மன் தாலாட்டு ஆகியவை நடந்தன. இன்று அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, நாளை மஞ்சள் நீர் உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.