/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சர்வதேச நாடுகளுக்கான தபால் சேவை மீண்டும் துவக்கம்: கோட்ட கண்காணிப்பாளர் தகவல் சர்வதேச நாடுகளுக்கான தபால் சேவை மீண்டும் துவக்கம்: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
சர்வதேச நாடுகளுக்கான தபால் சேவை மீண்டும் துவக்கம்: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
சர்வதேச நாடுகளுக்கான தபால் சேவை மீண்டும் துவக்கம்: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
சர்வதேச நாடுகளுக்கான தபால் சேவை மீண்டும் துவக்கம்: கோட்ட கண்காணிப்பாளர் தகவல்
ADDED : அக் 20, 2025 09:44 PM
கடலுார்: சர்வதேச நாடுகளுக்கான தபால் சேவை மீண்டும் துவங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலுார் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கலைவாணி செய்திக்குறிப்பு.
கடலுார் தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான சர்வதேச தபால் சேவைகள் (ஸ்பீட் போஸ்ட், பார்சல் உள்ளிட்டவை) மீண்டும், செயல்படுத்தப் படுகின்றன.
இந்த சேவைகள் சில மாதங்களாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த சேவைகள் மீண்டும் தபால் நிலையங்களில் துவங்கப் பட்டுள்ளன.
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த சர்வதேச தபால் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்திக்கொள்ள லாம்.
இதைப் பயன்படுத்தி அனுப்பப்படும் தபால் பொருட்கள், முகவரி மற்றும் தொடர்பு விபரங்களுடன் அனுப்பப்பட வேண்டும். அனுப்பப்படும் பொருட்கள் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் இறக்குமதி விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும்.
மேலும் தகவல்களுக்கு அருகிலுள்ள தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.indiapost.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


