Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஏரிகளில் மீன்பிடி உரிமை குத்தகை ஏலம்  இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு

ஏரிகளில் மீன்பிடி உரிமை குத்தகை ஏலம்  இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு

ஏரிகளில் மீன்பிடி உரிமை குத்தகை ஏலம்  இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு

ஏரிகளில் மீன்பிடி உரிமை குத்தகை ஏலம்  இன்று முதல் விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : ஜூன் 25, 2025 08:14 AM


Google News
கடலுார் : கடலுார், விருத்தாசலம் பகுதி ஏரிகளில் மீன்பிடி உரிமைக்கான குத்தகை ஏலத்திற்கு 25ம் தேதி முதல் மின்னனு ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

கடலுார் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் மீன்பிடி உரிமைக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மூலம் குத்தகை ஏலம் விடப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள கடலுார் கொண்டங்கி ஏரி, விருத்தாசலம் வட்டம் கோபாலபுரம் வண்ணத்தி ஏரி, வி.குமாரமங்கலம், கம்மாபுரம், விருத்தாசலம் கஸ்பா ஏரி, முகாசப்பருர், எடச்சித்தூர், சத்தியவாடி, எறும்பூர், அலிச்சக்குடி, கார்கூடல், சாத்துக்கூடல், மங்கலம்பேட்டை மற்றும் இளமங்கலம் உள்ளிட்ட 15 ஏரிகள் மீன்பிடி உரிமைக்கு மூன்று ஆண்டு கால குத்தகைக்கு விடப்படுகிறது.

மீன்பிடி குத்தகை ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் இன்று (25ம் தேதி) முதல் பரங்கிப்பேட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு www.tntenders.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், 04144-243033 என்ற தொலைபேசி எண்ணிலும் தெரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us