/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ முத்தாலம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் முத்தாலம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
முத்தாலம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
முத்தாலம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
முத்தாலம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம்
ADDED : செப் 14, 2025 12:44 AM

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த பல்லவராயநத்தம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது.
நடுவீரப்பட்டு அடுத்த பல்லவராயநத்தம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 12ம் தேதி காலை கணபதி ேஹாமத்துடன் துவங்கியது. அன்றிரவு, முதல் கால யாக சாலை பூஜை நடந்தது.
நேற்று காலை இரண்டாம் கால யாக சாலை பூஜை, மாலை மூன்றாம் கால யாக சாலை பூஜை நடந்தது.
இன்று (14ம் தேதி) காலை 5:00 மணிக்கு நான்காம் கால யாக சாலை பூஜை, 6:50 மணிக்கு கடங்கள் புறப்பாடு, 7:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. 15ம் தேதி முதல், மண்டாலபிேஷகம் துவங்குகிறது.
விழா ஏற்பாடுகளை உபயதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.