தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/லாரி கடத்தல் இருவருக்கு வலை

லாரி கடத்தல் இருவருக்கு வலை

லாரி கடத்தல் இருவருக்கு வலை


ADDED : பிப் 06, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2024 05:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் இரண்டு கார் மற்றும் மினி லாரியை திருமண நிகழ்ச்சிக்கு எடுத்துச் சென்று தலைமறைவான இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

விருத்தாசலம் பெரியார் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன், 36. இவருக்கு சொந்தமான 2 கார் மற்றும் கொடிக்களம் கிராமத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு சொந்தமான மினி லாரி ஆகியவற்றை, மயிலாடுதுறையை சேர்ந்த விஜயசுந்தரம் என்பவரின் திருமண நிகழ்ச்சிக்காக, கடந்தாண்டு ஆக., 4ம் தேதி விருத்தாசலம் புதுக்குப்பத்தை சேர்ந்த மோகன், அருண் ஆகிய இருவரும் எடுத்து சென்றனர்.

திருமணம் முடிந்து 5 மாதமாகியும் இதுவரை திருப்பி தராமல், இருவரும் தலைமறைவிட்டனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் மோகன், அருண் இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us