Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சிதம்பரத்தில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

சிதம்பரத்தில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

சிதம்பரத்தில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

சிதம்பரத்தில் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம் அமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்பு

ADDED : அக் 09, 2025 02:14 AM


Google News
Latest Tamil News
சிதம்பரம்: சிதம்பரம் தொகுதி தி.மு.க., சார்பில், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பாகமுகவர்கள் கூட்டம் நடந்தது.

சிதம்பரம் கார்த்திகேயன் மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதி பொறுப்பாளர் ராஜ்யசபா எம்.பி., கிரிதரன் முன்னிலை வகித்தார். சிதம்பரம் தொகுதி பொறுப்பாளர் பாரிபாலன் வரவேற்றார்.

கூட்டத்தில், ஒன்றிய பகுதி மற்றும் நகரப்பகுதிகளில் கடந்த எம்.பி., தேர்தலில் வாக்கு குறைவாக உள்ள ஓட்டுச்சாவடிக்குட்பட்ட நிர்வாகிகளை அழைத்து, வாக்கு குறைந்ததற்கான விளக்கம் கேட்க்கப்பட்டு, அப்பகுதி மக்களின் குறைகளை போக்கி அரசின் சாதனைகளை கூறி, பணியாற்ற வேண்டும் என அமைச்சர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி பேசி னார்.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கதிரவன், கலை இலக்கிய அணி பழனிவேல், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், பாலமுருகன், பொறியாளர் அணி அப்பு சந்திரசேகரன், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி, சிதம்பரம் நகர நிர்வாகிகள் பாலசுப்ரமணியன், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, விஜயாரமேஷ், வெங்கடேசன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், முத்துபெருமாள், சங்கர், மனோகர், நிர்வாகிகள் ஜேம்ஸ், அப்பு, பாலசுப்ரபமணின் இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி, விஜயா, ரமேஷ், பழனி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us