ADDED : செப் 25, 2025 11:39 PM
குறிஞ்சிப்பாடி: மகள் மாயமானது குறித்து தாய் போலீசில் புகார் அளித்தார்.
குள்ளஞ்சாவடி அடுத்த தங்களிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமான் மகள் ஜமுனா, 20; கடலுார் தனியார் கலைக் கல்லுாரியில் மூன்றாமாண்டு மாணவி.
நேற்று முன்தினம் ஜமுனா தனது பாட்டி மீனாட்சிக்கு உடல்நிலை சரியில்லாததால், சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.
அப்போது, ஜமுனா திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஜமுனாவின் தாய் சரளா அளித்த புகாரின் பேரில்,குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.