/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ நத்தவெளி இணைப்பு சாலை கந்தல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி நத்தவெளி இணைப்பு சாலை கந்தல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
நத்தவெளி இணைப்பு சாலை கந்தல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
நத்தவெளி இணைப்பு சாலை கந்தல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
நத்தவெளி இணைப்பு சாலை கந்தல்: வாகன ஓட்டிகள் கடும் அவதி
ADDED : அக் 20, 2025 09:48 PM

கடலுார்: கடலுார் நத்தவெளி-சரவணா நகர் இணைப்பு சாலையில் பாதாள சாக்கடை மேன்ேஹால் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் சாலை வீணாகி வருகிறது.
கடலுார் நத்தவெளி-சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் சில இடங்களில் பாதாள சாக்கடை மேன்ேஹால் உள்வாங்கியும், சில இடங்களில் மேடாகவும் உள்ளன.
இதனால், வாகன ஓட்டிகள் பள்ளம் இருப்பதற்கான அறிகுறி தெரியாமல் கீழே விழுந்து காயமடைகின்றனர். பாதாள சாக்கடை மேன்ேஹால் உடைப்பு ஏற்பட்ட இடங்களில் சிறிது சிறிதாக ஜல்லிகள் பெயர்ந்து சாலை வீணாகி வருகிறது.
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலை அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வீணாகி வருவதாக பொதுமக்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குண்டும், குழியுமான சாலை திருவந்திபுரத்தில் இருந்து கடலுார் நோக்கி வரும் பஸ்கள், திருப்பாதிரிப்புலியூர் ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் அருகில் உள்ள நத்தவெளி-சரவணா நகர் இணைப்பு சாலை வழியாக செல்கின்றன. இந்த இணைப்பு சாலை உள்ள இடத்தில் பள்ளம் ஏற்பட்டு, மழைநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பதற்கான அறிகுறி தெரியாமல் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. வாகனங்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளுக்கு உடல்வலி ஏற்படுகிறது.
எனவே, குண்டும், குழியுமான சாலையையும், மேன்ேஹால் உடைப்பு ஏற்பட்ட சாலையையும் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


