நெல்லிக்குப்பம் கோவில் கும்பாபிஷேகம்
நெல்லிக்குப்பம் கோவில் கும்பாபிஷேகம்
நெல்லிக்குப்பம் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : பிப் 02, 2024 03:56 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் மோரை மேட்டுத் தெருவில் உள்ள கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
அதை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை கணபதி, நவகிரக ஹோமங்கள், கோ பூஜை நடந்தது. அன்று மாலை யாகசாலை பூஜைகள் துவங்கின. நேற்று காலை யாகசாலை பூஜைகளும் பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது.
காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோவிலை வலம் வந்தது. 9:30 மணிக்கு கங்கை யம்மன், வலம்புரி விநாயகர், பாலமுருகன், சிவதுர்கை சன்னதிகளின் விமான கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு ஒரே நேரத்தில் கும்பாபி ேஷகம் நடந்தது.
இரவு அம்மன் வீதியுலா நடந்தது. பூஜைகளை மோகன்ராஜ் சிவம் குருக்கள் தலைமையில் செய்தனர்.


