ADDED : மார் 28, 2026 06:48 AM

அ நிறம் | அளவு
திட்டக்குடி:திட்டக்குடியில் துணை ராணுவப்படை வீரர்கள், போலீசாருடன் இணைந்து, கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
சட்டசபை தேர்தலையொட்டி பொதுமக்களிடம் அச்சத்தை போக்கி, 100 சதவீதம் ஓட்டளிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று, எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் வதிஷ்டபுரம், திட்டக்குடி , விருத்தாசலம், ஆவட்டி சாலை, தேரடி வீதி ஆகிய பகுதியில், துணை ராணுவப்படை வீரர்களுடன், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அப்போது, மேளதாளங்களுடன் ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்கள், வியாபாரிகளுக்கு, 100 சதவீதம் ஓட்டளிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்தினர். டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், சப் இன்ஸ்பெக்டர்கள் பாக்கியராஜ், துரைக்கண்ணு உட்பட பலர் பங்கேற்றனர்.





