/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை வாயிற்கூட்டம் ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை வாயிற்கூட்டம்
ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை வாயிற்கூட்டம்
ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை வாயிற்கூட்டம்
ஓய்வூதியர் சங்கத்தினர் கோரிக்கை வாயிற்கூட்டம்
ADDED : அக் 15, 2025 11:16 PM

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில். ஆசிரியரல்லாத ஓய்வூ தியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை விளக்க வாயிற்கூட்டம் நடத்தினர்.
அண்ணாமலை பல்கலைகழக கூட்டத்திற்கு சங்கத் தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் நடேசன், பொதுச்செயலர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பொருளாளர் செல்வம், துணைத் தலைவர் குமார், துணைப் பொதுச்செயலர் பாலசங்கரன் உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 2013 லிருந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வூதிய பலன்களை ஓய்வூதியர்களுக்கு உடனே வழங்க வேண்டும், 30 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்களின் சம்பள குறைப்பு நடவடிக்கைகளை உடனே கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயிற் கூட்டம் நடந்தது.


