ADDED : செப் 23, 2025 11:37 PM
புவனகிரி; புவனகிரி பகுதியில் ஆக்கிரிமிப்புகளை அகற்ற ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கலெக்டருக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் குணசேகரன் அனுப்பியுள்ள மனு:
புவனகிரி பகுதியில் நாளுக்கு நாள் ஆக்கிரிப்பு அதிகரித்துள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளதுடன், அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. குறிப்பாக, பாலக்கரையில் இருந்து புவனகிரி பங்களா மற்றும் கீழ்புவனகிரி வரை இரு பக்கமும் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு உள்ளது. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.