ADDED : அக் 08, 2025 11:22 PM
கடலுார்:அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக முறையான வழிகாட்டுதல் இல்லாமல் மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறையும் அவலநிலை உள்ளது.
அரசுப்பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம்வகுப்பு வரை உடற்கல்விக்கு பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, தேர்வுகளும் நடத்தப்படு கிறது.
ஆனால் பல அரசுப்பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர் கூட இல்லாத நிலையில் மாணவர்களுக்கு விளையாட்டுப்போட்டிகளில் முறையான வழிகாட்டுதல் இல்லாமல் ஆர்வமின்றி உள்ள னர்.
எனவே நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் குறைந்த பட்சம் ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.


