மருதுாரில் தை பூச ஏற்பாடுகள் தீவிரம்
மருதுாரில் தை பூச ஏற்பாடுகள் தீவிரம்
மருதுாரில் தை பூச ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 22, 2024 05:58 AM
புவனகிரி : புவனகிரி தாலுகா மருதுார் வள்ளலார் அவதார இல்லத்தில் வரும் 25 ம் தேதி தை பூசம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது.
மருதுாரில் ஆண்டு தோறும் தை பூசத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வந்து செல்வது வழக்கம். அன்றைய தினம் பக்தர்கள் வந்து தியானம் செய்து அகற்பா இசைக்க தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்துடன் ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
இதே போன்று புவனகிரி வள்ளலார் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் ஜோதி தரிசனம் மற்றும் அன்னதானம் நடக்கிறது.


