/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல் என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்
ADDED : அக் 04, 2025 07:27 AM

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் நாட்டுநலப் பணி திட்ட முகாமில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வேப்பங்குறிச்சி அரசு பள்ளியில் என்.எல்.சி., மேல்நிலைப்பள்ளி சார்பில் நாட்டு நல பணித்திட்ட முகாம் கடந்த வாரம் தொடங்கியது. முகாமில் மாணவர்கள் கிராம சுற்றுப்புற துாய்மை, பெண் கல்வியை ஊக்குவித்தல், டெங்கு ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு, நெகிழி ஒழிப்பு, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா நேற்று என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
விழாவிற்குப் பள்ளி உதவி தலைமையாசிரியர் சேகர் தலைமை தாங்கினார். முகாம் அறிக்கையை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஞானதீர்த்தம் வாசித்தார். சிறப்பு விருந்தினர் என்.எல்.சி., பள்ளி கல்வி செயலாளர் பிரபாகரன், முகாமில் பங்கேற்ற மாணவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
ஆசிரியர் லட்சுமிநாராயணன் நன்றி கூறினார்.


