ADDED : பிப் 29, 2024 11:50 PM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி அ.தி.மு.க., சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
அ.தி.மு.க, மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சி செயலாளர் அர்ஜீனன் தலைமையில், ஜெயலலிதா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
கட்சி நிர்வாகிகள் பன்னீர், செல்வி, கந்தசாமி, ஜெயராமன், தாமோதரன், ராஜி, அறிவழகன், குமார், சத்யநாராயணன் கலந்து கொண்டனர்.


